ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் ஹிமாலயன் ஸ்க்ராம் 411 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஹிமாலயன் அட்வென்ஜர் டூரர் பைக்கின் அடிப்படையில் இந்த புதிய ஸ்க்ராம்ப்ளர் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிமாலயனுடன் ஒப்பிடும்போது, பல்வேறு விதங்களில் ஸ்க்ராம் 411 மாற்றப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள பிக்ராக் டர்ட்பார்க்கில் இந்த பைக்கை நாங்கள் டெஸ்ட் ரைடு செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த பைக் குறித்த விரிவான தகவல்களையும் இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.
#Royal Enfield. #RE Scram 411, #Scram 411 Performance